less than 1 minute read

beauty-of-life

காண கண் கோடி இடங்கள் வைத்தாய்

கண்கள் ஏனோ இரண்டை படைத்தாய்

இரண்டு 👀 கண்கள் போதாது எனவே முக்காலம்⏳ படைத்தாய்!!

இருப்பினும் ஏனோ முதுமை படைத்தாய்!!

எத்தனை கோடி இன்பம் படைத்தாய்

எனினும் எளிமை என் படைத்தான் -

அதை என்னுள் வைத்தாய்!!

இதயம் ஒன்றே 💖 படைத்தாய் எனினும் இன்னல் நூறு படைத்தாய்!!

இன்னும் எத்தனை ஆண்டு இந்த ஒப்பனை நாடகங்கள் 🎭

எந்த இலைகளும் 🍃 காற்றைப் பிடித்து வைத்துக்கொள்ளவில்லை

ஏந்த காற்றும் இலையில் தங்க போவதுமில்லை

ஆனாலும் அங்கே காதலுக்கு ஒரு குறைவுமில்லை!!


இறுதியில் தனியாக வாடதான் 🍂 போகிறோம்

இருப்பினும்

வளராமல்… 🍃

தளிராமல்.. 🌾

நறுமணம் பரப்பாமல் இருக்க அவசியமில்லை 🌻✨

Tags:

Categories:

Updated: