Post

பாரதியார் பாடல்கள்

பாரதியார் பாடல்கள்

நன்று கருது

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே
ஒற்றுமை நம்மில் நீங்கில் அனைவருக்கும் தாழ்வே
நன்றிது தேர்ந்திடல் வேண்டும் -
இந்த ஞானம் வந்தால் பின்
நமக்கேது வேண்டும்

வாணியை வேண்டுதல்

தெளிவுறவே அறிந்திடுதல்,
தெளிவுதர மொழிந்திடுதல்; சிந்திப பார்க்கே
களிவளர உள்ளத்தில் ஆநந்தக் கனவுபல
காட்டல் கண்ணீர்த்
துளிவரஉள் ளுருக்குதல்இங் கிவையெல்லாம்
நீஅருளும் தொழில்க ளன்றோ?
ஒளிவளருந் தமிழ்வாணீ, அடியனேற்
கிவையனைத்தும் உதவு வாயே


புதிதாய்ப் பிறந்து விட்டேன்

சென்றதினி மீளாது;மூடரே,
நீர் எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து குமையாதீர்;
சென்றதனைக் குறித்தல் வேண்டா;
இன்று புதிதாய்ப் பிறந்தோம்
என்று நெஞ்சில் எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;
அஃதின்றிச் சென்றதையே மீட்டும் மீட்டும்.
மேன்மேலும் நினைந்தழுதல் வேண்டா,அந்தோ!
மேதையில்லா மானுடரே!மேலும் மேலும் மேன்மேலும்
புதியகாற் றெம்முள்வந்து மேன்மேலும் புதியவுயிர் விளைத்தல் கண்டீர்.
ஆன்மாவென் றெகருமத் தொடர்பை யெண்ணி
அறிவுமயக் கங்கொண்டு கெடுகின்றீரே!

மான்மானும் விழியுடையாள் சக்தி தேவி
வசப்பட்டுத் தனைமறந்து வாழ்தல் வேண்டும்.
சென்றவினைப் பயன்களெனைத் தீண்ட மாட்டா;
‘ஸ்ரீதரன்யான் சிவகுமா ரன்யா னன்றோ?
நன்றிந்தக் கணம்புதிதாய்ப் பிறழ்து விட்டேன்;
நான் புதியவன்,நான் கடவுள்,நலிவி லாதோன்’
என்றிந்த வுலகின்மிசை வானோர் போலே
இயன்றிடுவார் சித்தரென்பார்;

பரம தர்மக் குன்றின்மிசை யொருபாய்ச்ச லாகப் பாய்ந்து
குறிப்பற்றார் கேடற்றார் குலைத லற்றார்.
குறியனந்த முடையோராய்க் கோடி செய்தும்
குவலயத்தில் வினைக்கடிமைப் படாதா ராகி
வெறியுடையோன் உமயாளை இடத்தி லேற்றான்
வேதகுரு பரமசிவன் வித்தை பெற்றுச்
செறியுடைய பழவினையாம் இருளைச் செற்றுத்
தீயினைப்போல் மண்மீது திரிவார் மேலோர்,
அறிவுடைய சீடா,நீ குறிப்பை நீக்கி
அநந்தமாம் தொழில் செய்தால் அமர னாவாய்
————

பேராசை

மானம் சிறிதென்றெண்ணி வாழ்வு பெரிதென்றெண்ணும்
ஈனர் உலகந்தனில் இருக்க நிலைமையுண்டோ
நாட்டில் அவமதிப்பும் நாணின்றி
இழி செல்வத்
தேட்டில் விருப்பம் கொண்டே இவர் சிறுமையடைந்தாரே
ஒன்றையே பற்றி ஊசலாடுகிறாய் மனமே
ஒன்றையே விட்டு அடுத்ததை நோக்கி அடுத்துலாவுகிறாய்
தொட்டதை மீள மீளவும் தொடுவாய் மனமே
புதியது காணில் புலனழிந்திடுவாய் மனமே
பேராசை கொண்டு பிழை செயல்கள்செய்யாதே
வாராத வன்கொடுமை மாவிபத்து வந்து விடும்
அச்சத்தை வேட்கைதனை அழித்து விட்டால்
அப்போது சாவுமங்கே அழிந்து போகும்
இச்சகத்தோர் பொருளை தீரர் நம்மிடம்
இல்லையென்று வருந்துவதில்லை
நச்சி நச்சி உளத்தொண்டு கொண்டு
நானிலத்து இன்பம் நாடுவதில்லை
பிச்சை கேட்பதுமில்லை இன்பத்தில்
பித்து கொண்டு மயங்குவதுமில்லை
எண்ணத்தால் ஏழுலகினையும்
விழுங்குதல் வேண்டுவீர் மீளவும் மறப்பீர்

This post is licensed under CC BY 4.0 by the author.